தமிழகத்தின் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

இதனிடையே சட்டசபையில் அமைச்சர் ரகுபதி அறிவித்தபடி மாதத்திற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை என எட்டு முதல் பத்து முறை பேசவும், ஒருமுறை அதிகபட்சமாக 12 நிமிடங்கள் பேசவும், வீடியோ தொலைபேசி வசதி ஏற்படுத்தவும் தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு சிறைவாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது