கேரளாவில் முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டி.எச்.முஸ்தபா (84) கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை காலமானார். கருணாகரன் அமைச்சரவையில் 1991-94 க்கு இடையில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்துள்ளார். முஸ்தபா எர்ணாகுளம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக 14 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

மாநில காங்கிரஸ் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். 1977-ல் ஆலுவா தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். குன்னத்தநாடு தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றுள்ளார். அவரது உடல் இன்று இரவு 8 மணிக்கு மாரம்பள்ளி ஜமாத் கப்ரிஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.