கேரளாவின் திருவனந்தபுரம் டெக்னோ பார்க் பேஸ் 3 சந்திப்பில், சாலையில் மஞ்சள் நிறத்தில் கட்டம் கட்டமாக கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டதால், இந்தப் புதிய மஞ்சள் கட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தக் கட்டங்கள் சாலையில் வாகனங்கள் ஒழுங்காகப் பயணிக்க உதவுகின்றன. இதன்படி, நேராகச் செல்ல விரும்புவோர், தங்கள் பாதையில் வேறு வாகனங்கள் இல்லையென்றால் நேரடியாகப் பயணிக்கலாம். இடதுபுறம் திரும்ப விரும்புவோரும் இதே விதியைப் பின்பற்றி, பாதை காலியாக இருந்தால் திரும்பலாம்.
வலதுபுறம் திரும்ப விரும்புவோர், தங்கள் வாகனத்தை சாலையின் நடுவில் உள்ள மஞ்சள் கட்டத்தில் நிறுத்தி, எதிரே வரும் வாகனங்கள் சென்ற பிறகு பயணிக்கலாம். இந்த விதிமுறைகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், விபத்துகளைக் குறைக்கவும் உதவுகின்றன. இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
