ஜப்பானில், பெண்கள் மற்றும் சிறுமிகளை அவர்களுக்குத் தெரியாமல், தவறான எண்ணத்துடன் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் புகார்கள் அதிகரித்ததால், அரசு ஒரு புதிய முடிவு எடுத்தது. ஒருவர் புகைப்படம் எடுக்கும்போது, அது அருகில் உள்ளவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக, ஜப்பானில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் கேமரா ஷட்டர் சத்தம் (கிளிக் ஒலி) கட்டாயமாக ஒலிக்க வேண்டும் என்று விதி வகுத்தது. இதனால், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும்போது எப்போதும் ஒரு சத்தம் கேட்கும், இதை முடக்கவோ அல்லது சைலண்ட் செய்யவோ முடியாது. இந்த சத்தத்தைக் கேட்டு, அருகில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.

இந்த விதி ஜப்பானில் வாங்கப்படும் அனைத்து மொபைல் போன்களுக்கும் பொருந்தும், ஆனால் ஐபோன் 15 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களில், இந்திய சிம் கார்டு பயன்படுத்தினால், இந்தியாவுக்குள் வந்த பிறகு ஷட்டர் சத்தத்தை மாற்றிக்கொள்ள முடியும். இந்த நடவடிக்கை, ஒரு சிலரின் தவறான செயல்களால், நாட்டில் உள்ள அனைவரின் மொபைல்களிலும் ஷட்டர் சத்தம் கட்டாயமாக்கப்பட்டு, ஒரு வகையில் தண்டனை போல உள்ளதாகவும் கருதப்படுகிறது. இந்தத் தகவலை ஜப்பானில் வசிக்கும் ஒரு தமிழ் பிளாகர் இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.