
மேற்குவங்கம் மற்றும் ஜார்கண்டில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடற்கரைப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாகவும் இதனால் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே கேரளாவில் கனமழை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருப்போரை மீட்கும் பணி நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.