பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ‘டேப்-பால்’ (Tape-Ball) கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில், வீரர்களை விட ஒரு ரசிகர் செய்த சாகசம் இப்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
போட்டியின் போது பேட்ஸ்மேன் அடித்த பந்து சிக்ஸருக்குப் பறக்க, அதைப் பிடிக்க கேலரியில் இருந்த ரசிகர் ஒருவர் மின்னல் வேகத்தில் முன்னேறி வந்து, மரத் தடுப்புகளுக்கு இடையே தலைகுப்புற விழுந்து ஒரு அபாரமான ‘டைவிங்’ கேட்சைப் பிடித்தார்.
Unbelievable athleticism 😱😱 pic.twitter.com/wzt5a8ZfkC
— Pakistan Tapeball Championship (@tapeballchamp) March 4, 2026
அந்த இக்கட்டான சூழலிலும் பந்தைக் கீழே விடாமல் அவர் கச்சிதமாகப் பிடித்ததைப் பார்த்து மைதானமே அதிர்ந்து போனது. அவரது இந்த அசாத்தியமான முயற்சியைப் பாராட்டிய போட்டி ஏற்பாட்டாளர்கள், அவருக்கு உடனடியாக 20,000 பாகிஸ்தான் ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கி கௌரவித்தனர்.
சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேனை விட, பந்தைப் பிடித்த ரசிகருக்குக் கிடைத்த இந்த மகுடம், கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
