ஜெய்ப்பூரில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி இந்த சீசனின் அதிவேக சதத்தை பதிவு செய்தார். வெறும் 36 பந்துகளில் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்த அவர், ஒட்டுமொத்தமாக 37 பந்துகளில் 103 ரன்களை குவித்தார்.
இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 12 பிரம்மாண்ட சிக்சர்கள் அடங்கும். 278.36 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய இவரது இந்த அதிரடி ஆட்டம், ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிவேக சதமாகப் பதிவானது.ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதங்களின் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி இப்போது இரண்டு முறை இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
वैभव सूर्यवंशी ने फिर से करके दिखाया 103#VaibhavSuryavanshi #RRvsSRH #Ipl2026 pic.twitter.com/6oetUZITor
— Ajeet (@ajeetkumarAT) April 25, 2026
“>
கிறிஸ் கெய்ல் 2013-ல் 30 பந்துகளில் அடித்த சதமே இன்றுவரை முதலிடத்தில் உள்ளது. கடந்த 2025 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வைபவ் 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருந்தார். தற்போது ஐதராபாத் அணிக்கு எதிராக அவர் அடித்துள்ள 36 பந்து சதம், அவரை வரலாற்றின் டாப் 3 பட்டியலில் மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளது.
