ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் உலகமே வியக்கும் வகையில் ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்த வைபவ், வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். இந்த சீசனில் அவர் அடிக்கும் மூன்றாவது 15 பந்து அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பவர்பிளேயிலேயே 7 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 333.33 ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்து எதிரணியை நிலைகுலைய வைத்தார்.
இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் (15 வயது 29 நாட்கள்) 1,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பிரம்மாண்ட உலக சாதனையை வைபவ் படைத்துள்ளார். ஒரு சிறுவன் என்று கூடப் பார்க்காமல் சர்வதேச தரத்திலான பந்துவீச்சாளர்களை அவர் சிதறடித்த விதம், “ஐபிஎல் தொடரின் அடுத்த சகாப்தம் தொடங்கிவிட்டது” என்பதை பறைசாற்றியுள்ளது.
Clearing old debts and opening new accounts 👊
🎥 Vaibhav Sooryavanshi is dealing in fireworks 🔥
Updates ▶️ https://t.co/PVdpjhxVEy#TATAIPL | #KhelBindaas | #RRvSRH | @rajasthanroyals pic.twitter.com/zTRbvv0viN
— IndianPremierLeague (@IPL) April 25, 2026
“>
மைதானத்தில் இருந்த ரசிகர்கள் முதல் கிரிக்கெட் ஜாம்பவான்கள் வரை அனைவரும் இந்த 15 வயது சிறுவனின் அசாத்தியமான ஆட்டத்திறனைக் கண்டு வாயடைத்துப் போயுள்ளனர்.
