
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக சில வேடிக்கையான வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் அதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், ஒரு முதியவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருக்கும் போது திடீரென அவரின் வாயின் அருகே ஒரு வேக்யூம் கிளீனர் ஐ கொண்டு வருகின்றனர்.
முதியவர் அதிலிருந்து வரும் காற்றை தவிர்க்க முயற்சிக்கும் நிலையில் முதியவரின் முகத்தின் தோலும் வாக்யூம் கிளீனரை நோக்கி இழுக்கப்படுவது போல தெரிகின்றது. ஆனால் முதியவர் வாயை திறக்கும் போது தான் உண்மையான வேடிக்கை நடக்கிறது. அதாவது வாயை திறந்ததும் வாக்யூம் கிளீனர் அவரின் வாயிலிருந்த பல் செட்டை இழுத்து விடுகின்றது . தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
hahahaah pic.twitter.com/CShXS7BQdz
— Enezator (@Enezator) August 22, 2023