அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீக்க நடவடிக்கை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

“கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல, செங்கோட்டையனை நீக்கியவருக்கே இது பின்னடைவாக அமையும்” என தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவில் உள்நிலை குழப்பத்தை தீர்க்காமல், முக்கிய தலைவர்களை ஒதுக்கி வைப்பது கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தினகரனின் இந்தக் கருத்து, EPS மீது நேரடி தாக்குதலாகக் கருதப்படுகிறது.