அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை வெளியிட்டார். “என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல், என்னை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளனர். இதற்கு எல்லாம் காலமே சரியான பதில் சொல்லும்” என்று அவர் கூறினார்.
மேலும், “அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற என் கோரிக்கை தொடர்ந்தும் இருக்கும். அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி நான் செய்யும் வரை தொடரும். அதிமுக தொண்டர்களின் நலனுக்காகவே என் செயல் இருக்கும்” என செங்கோட்டையன் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்துகள், அதிமுக உள்நிலையில் இன்னும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
