அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், NDA கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதற்கான காரணமாக, EPS-க்கு எதிராகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

கூட்டணி மற்றும் அதிமுக விவகாரத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா சரி செய்வார் என நம்பியிருந்த நிலையில், திடீரென அண்ணாமலை பாஜகத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் தனக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், “OPS-க்கு நடந்தது, அடுத்ததாக எனக்கும் நடக்கலாம் என்ற சூழ்நிலையை உணர்ந்ததால் தான் கூட்டணியில் இருந்து வெளியேற தீர்மானித்தேன்” என்று தினகரன் விளக்கம் அளித்துள்ளார். இந்த அறிவிப்பு, அதிமுக மற்றும் NDA கூட்டணிக்குள் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. வருங்காலத்தில் EPS-ஐ எதிர்த்து தினகரன் எப்படிப் போராடப் போகிறார் என்பதில் அரசியல் வட்டாரத்தின் கவனம் திரும்பியுள்ளது.