கரூர் நிகழ்வுக்குப் பிறகு அதிமுக – தவெக கூட்டணி குறித்த அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் கௌதமி இதுகுறித்து கருத்து தெரிவித்தார்.

“தவெக உடன் அதிமுக கூட்டணி அமைந்தாலும்கூட, முதல்வர் வேட்பாளராக இருப்பவர் ஈபிஎஸ்தான். அதேசமயம், கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் நேரில் செல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார். EPS, “தவெக கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போட்டாச்சு” எனும் கூற்றும், விஜய் அமைதியாக இருக்கின்ற நிலையும் கூட்டணி விவாதத்தை மேலும் தீவிரமாக்கி இருக்கின்றன
