தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு காணொளியில், நடிகர் விஜயை குறித்து நடிகை மல்லிகா அளித்த கருத்துகள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.
கேரளாவைச் சேர்ந்த நடிகை மல்லிகா, நடிகர் விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் அவருடைய தங்கையாக நடித்தவர். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் விஜய் அதிகமாகப் பேசாமல் அமைதியாகவே இருந்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது, தனது அரசியல் கட்சி தொடங்கி மக்களிடம் நேரில் சென்று உரையாற்றும் அவரை காணும் போது மிகப் பெரிய மாற்றம் தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் சார் மக்கள் கிட்ட கண்டிப்பா நடிக்க மாட்டாரு..
விஜய் சார் தான் ஜெயிப்பாரு..
-திருப்பாச்சி movie actress #Mallika 🙌@TVKVijayHQ pic.twitter.com/YegiDJoSf3
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) October 19, 2025
“>
விஜய் மக்கள் முன் நடிக்கக்கூடியவர் அல்ல என்றும், அவர் உண்மையைத்தான் பேசுவார் என்றும், அதனால்தான் அவர் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்று வருகிறார் என மல்லிகா கூறியுள்ளார். மேலும், “கலிகாலத்தில் நல்லது செய்ய நினைத்தாலும் எதிர்ப்பு வருவது சகஜம். ஆனால் இறுதியில் நல்லதே வெற்றி பெறும்.
விஜயின் அரசியல் பயணத்தில் பலர் சதி செய்யலாம். அவரை பாதுகாக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றும் தெரிவித்தார். இந்தக் கருத்துகள், விஜயின் அரசியல் நடைமுறையை ஒட்டி பலரிடையே தாக்கம் ஏற்படுத்தியுள்ளது
