நடிகர் விஜய் தலைமையிலான தவெக அரசியல் பயணத்தில், தீபாவளிக்குப் பிறகு தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்காக தவெக நிர்வாகிகளுக்கு விஜய் நேரடியாக அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளிக்குப் பின் நடைபெற இருக்கும் பரப்புரை நிகழ்வுகள், மக்கள் தொடர்பு கூட்டங்கள் என அனைத்திற்கும் திட்டமிடல் மற்றும் துரித செயல்பாடுகள் துவங்கியுள்ளன.
மேலும், சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அவரது அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரம் தொடர்பான முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது, தமிழக அரசியலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
