திருவண்ணாமலையில் நேற்று (அக்.18) செய்தியாளர்களை சந்தித்த நடிகை மற்றும் பாஜக நிர்வாகியான கஸ்தூரி, விஜய்யின் அரசியல் பயணத்தைக் கடுமையாக விமர்சித்தார்.

“திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் உள்ளது. அந்த நோக்கத்தை கொண்ட அனைவரும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்” எனக் கூறிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் திமுகவுக்கு மாற்றாக ஒருங்கிணைந்த அணியை உருவாக்குவது அவசியம் எனக் கூறினார்.

மேலும், கரூர் சம்பவத்திற்கு பிறகு, விஜய் தலைமையிலான புதிய கூட்டணி சரியாக அமையாது என்றும், அவருடன் இருக்கும் சிலர் சரியான பாதையில் இல்லை என்பதையே இந்நிலையில் உணர முடிகிறது என்றும் கஸ்தூரி தெரிவித்தார்.

அரசியலில் செயலில் இறங்குவது குறித்து பலரும் எதிர்பார்த்தாலும், கூட்டணி அமைப்பிலும், அதனை வழிநடத்துபவர்களின் நிலைப்பாடிலும் தெளிவு இல்லாத நிலைமை உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்