திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறுவது தொடர்பான பரப்புரை குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், “நாங்கள் வெளியேறினால், சிலர் அதை தீபாவளி போல கொண்டாடுவார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.
பாஜகவுக்கு நேரடி எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரே கட்சி விசிகதான் என்றும், திமுக கூட்டணி வலுவாக இருக்க விசிக மிக முக்கிய பங்காற்றுவதாகவும் தெரிவித்தார். மேலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக விசிக செயல்படுவதைப்போல் பொய்யான தோற்றம் உருவாக்க திட்டமிட்டு சிலர் செயல்படுகிறார்கள் என்றும், இதன் மூலம் திமுக கூட்டணியை உடைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
