தமிழக அரசு 2026ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் ஆண்டில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், ரம்ஜான், புனித வெள்ளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகள் உட்பட மொத்தம் 24 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 24 பொது விடுமுறை நாட்களில், தைப்பூசம் (பிப்ரவரி 1) மற்றும் தீபாவளி (நவம்பர் 8) ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 24 நாட்களைத் தவிர, வழக்கமான அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறையாகக் கருதப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.