தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகங்களுக்கான 2026ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்களின் பட்டியலை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 25 வரை, புத்தாண்டு, பொங்கல் தொடர் விடுமுறைகள், குடியரசு தினம், தைப்பூசம், ரம்ஜான், தமிழ்ப் புத்தாண்டு, மே தினம், பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைகள் அரசுத் துறைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும். இந்த ஆண்டு அதிகபட்சமாக ஜனவரி மாதம் மட்டும் 5 நாட்கள் விடுமுறை வருகிறது. எனினும், தைப்பூசம் (பிப்ரவரி 1) மற்றும் தீபாவளி (நவம்பர் 8) ஆகிய முக்கியப் பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏப்ரல் 1ஆம் தேதி (வங்கிகளின் ஆண்டுக் கணக்கு முடிவு) வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் தனிப்பட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.