உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அனைவரையும் பதற வைத்தது. ஒரு பெண், தனக்கு பிறந்த 15 நாளே ஆனா பச்சிளம் ஆண் குழந்தையை திடீரென குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்துவிட்டார். குளிர்ந்த வெப்பநிலையில் குழந்தை உரத்த குரலில் அழ ஆரம்பித்ததால், வீட்டில் உள்ளவர்களுக்கு விஷயம் தெரியவந்தது. அழுகை சத்தத்தைக் கேட்டு உடனடியாக ஓடி வந்த குடும்பத்தினர், குழந்தையை வெளியே எடுத்தனர். இன்னும் சற்று தாமதமாகியிருந்தால், அது குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும்.
விசாரணையில், இந்த சம்பவம் மூடநம்பிக்கை அல்லது கவனக்குறைவால் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. அந்தப் பெண், ‘போஸ்ட் பார்ட்டம் சைக்கோசிஸ்’ என்ற கடுமையான மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயால், பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் மிகுந்த மனா அழுத்தத்தால் சில சமயங்களில் தங்கள் குழந்தைக்கோ அல்லது தங்களுக்கோ தீங்கு விளைவிக்க முயற்சிக்கலாம். குழந்தையின் அழுகை சத்தம் கேட்காமல் இருந்திருந்தால், இந்த சம்பவம் பெரும் துயரத்தில் முடிந்திருக்கலாம். தற்போது குழந்தை பாதுகாப்பாக உள்ளது, மேலும் அந்தப் பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.
