சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வேடிக்கையாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு வீட்டில் குழந்தையுடன் நாய் ஒன்று துள்ளி குதித்து அழகாக விளையாடுகிறது. பொதுவாகவே வீட்டில் உள்ள குழந்தைகளை பெற்றோர்களை விட செல்லப்பிராணிகள் குறிப்பாக நாய்கள் மிகவும் பாசமுடனும் பாதுகாப்பாகவும் பார்த்துக் கொள்ளும். அதே சமயம் அடிக்கடி குழந்தைகளுடன் நாய்கள் விளையாடும் போது பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். அதன்படி தற்போது சுட்டிக் குழந்தையுடன் நாய் ஒன்று அழகாக விளையாடும் வீடியோ தற்போது வெளியாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.