பொதுவாகவே அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்கள் அனைவரும் வார இறுதி நாட்களில் தான் வீட்டை சுத்தம் செய்வார்கள். அப்போது குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய சிரமமாக இருக்கும். குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வதற்கு முன்பு அதில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து விட்டு அதன் பிறகு சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அடுக்காக சுத்தம் செய்தால் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். முதலில் அனைத்து அடுக்குகளையும் வெளியே எடுத்து அதனை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைத்துவிட்டு பிறகு ஃப்ரிட்ஜின் உட்புறங்களை சுத்தம் செய்யலாம்.

வினிகர் அல்லது பேக்கிங் சோடா ஏதாவது ஒன்றை தண்ணீரில் கலந்து சுத்தம் செய்து சுற்றிலும் உள்ள அழுக்கை எடுத்த பிறகு உள்ளே உள்ள கரைகளை எடுத்துவிட்டு பிறகு வெளியே சுத்தம் செய்யலாம். அதன் பிறகு உள்ளே உள்ள ஜூஸ், சாஸ் பாட்டில் மற்றும் உணவு பாத்திரங்கள் சுற்றிலும் நன்றாக துடைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த பாட்டில்களை நன்றாக மூடிவிட்டு பிறகு தண்ணீரில் கழுவலாம்.

அனைத்தையும் துடைத்து முடித்த பிறகு குளிர்சாதன பெட்டியில் இருக்கும் துர்நாற்றம் போவதற்கு அரைகுறையாக வெட்டப்பட்ட எலுமிச்சையை ஏதாவது ஒரு அறிக்கையில் வைத்து விட வேண்டும். நீண்ட காலம் குளிர்சாதன பெட்டியில் வாசனை நீடிக்க நீங்கள் விரும்பும் வாசனையுள்ள எசன்ஷியல் எண்ணையை பஞ்சில் சிறிது ஊற்றி உருட்டி ஒரு அறை ஒன்றில் வைத்து விடலாம். குளிர்சாதன பெட்டியை எளிதில் சுத்தம் செய்வதற்கு ஸ்பிரே பாட்டில் ஒன்றில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீர், அரை கப் வெள்ளை வினிகர் மற்றும் 2 டீஸ்பூன் வெண்ணிலா சாறு கலந்து பயன்படுத்தினால் சுத்தமாகவும் வாசனையாகவும் உங்களது குளிர்சாதன பெட்டி இருக்கும்.