நாட்டின் சிறந்த பண பரிமாற்ற தளமாக யுபிஐ தளம் விளங்கி வருகிறது.  UPI மூலமாக பண பரிமாற்றம் செய்வது எவ்வளவு எளிமையாக இருந்தாலும் சில சமயங்களில் தவறான தொகையையோ அல்லது தவறான எண்ணிற்கோ அனுப்பிவிடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு, தவறுதலாக பண பரிவர்த்தனை நடைபெறும் போது அந்த பணத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை பார்க்கலாம்.

UPI செயலியில் தவறுதலாக வேறு யாருக்காவது பணத்தை அனுப்பிவிட்டால் பதறவேண்டாம்.  எந்த UPI ஆப்பில் (GPay, Phonepe, Paytm) இருந்து பணம் அனுப்பினீர்களோ, அதன் சேவை மையத்தை 48 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு புகார் தரலாம் *NPCI இணையதளத்தில் உரிய ஆதாரங்களை சமர்பித்து புகார் அளிக்கலாம். *கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு நேரடியாக சென்று அல்லது சேவை மையம் வாயிலாக புகார் கூறலாம்.