பணத்தை மொபைல் பின் பகுதியில் வைக்கிறீர்களா அப்போது இது உங்களுக்கான செய்தி. பொதுவாக நாம் வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் கையில் பொருள்களை தூக்கிக்கொண்டு அலைய சங்கடப்பட்டு பொருட்களின் அளவை குறைத்து வெறும் செல்போனுடன் மட்டுமே செல்வோம். அவ்வாறு செல்லும் பொழுது பணத்தை கைகளில் வைத்திருக்கும் போன் கவர் பின்னால் வைத்துக்கொண்டு செல்வோம். ஆனால் அப்படி பேப்பரையோ அல்லது பணத்தையோ போனுக்கு பின்னால் வைப்பது ஆபத்து என்பது தெரியுமா? ஏனெனில் செல்போன்கள் தீப்பிடிப்பது அல்லது வெடிப்பது போன்றது இப்போது சகஜமாகிவிட்டது. இதற்கு காரணம் நாம்   கவனக்குறைவாக இருப்பது தான்.

நம்மில் பலருக்கு மொபைல் கவரில் பணம் வைக்கும் பழக்கம் உள்ளது. நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்கள் சிறப்புக் காகிதம் கொண்டும் பல வகையாக ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இது போனில் இருந்து வெளிவரும் வெப்பத்தை தடுத்து நிறுத்துகிறது. இதனால் போன் வெடிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.