இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராம சுரக்ஷா யோஜனா, தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டங்கள் போன்ற சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தபால் நிலையத்தில் குழந்தைகளுக்கான பால் ஜீவன் திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வெறும் 6 ரூபாய் மட்டும் முதலீடு செய்து ஒரு லட்சத்திற்கு காப்பீடு பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் இணைய பெண் குழந்தைகளுக்கு எட்டு முதல் 12 வயது வரை இருக்க வேண்டும். குழந்தைகள் ஏதோ ஒன்று காரணத்திற்காக இறந்து விட்டால் இந்த தொகை குடும்பத்திற்கு வழங்கப்படும். 18 வயது வரை இந்த காப்பீடு செல்லும். இந்த திட்டம் குறித்து மேலும் அறிய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும்.