கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சையது ஹுசைன், அபி ஜான், நிவேத் கிருஷ்ணா, அர்ஜுன் ஆகிய நான்கு பேரும் கைனுர் பகுதியில் உள்ள ஓடைக்கு குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது மாணவர்கள் நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர்.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் நான்கு பேரின் சடலத்தையும் மீட்ட நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.