ஸ்வீடன் நாட்டில் போராட்டத்தின் போது புனித நூலான குர்ஆனை எரித்த சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்களும் நடைபெற துவங்கியது.

இந்நிலையில் ஈராக் பாக்தாத்தில் அமைந்துள்ள ஸ்வீடன் தூதரகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தீ வைத்து கொளுத்தி உள்ளனர். அதோடு ஸ்வீடன் தூதரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு இச்சம்பவம் தொடர்பாக கண்டன தீர்மானம் கொண்டு வந்த போது இந்தியா ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.