கும்ப ராசி அன்பர்களே,

இன்று என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ அதனை செய்து முடிப்பீர்கள். நேசித்தவர்களால் எதிர்கால தேவை பூர்த்தியாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிகிறீர்கள். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனமாக இருங்கள். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் சிந்தித்து செய்வது நல்லது.

தேவையற்ற விஷயங்களில்  தலையிடாமல் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபப்பட வேண்டாம். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தொட்ட காரியம் கண்டிப்பாக துளிர்விடும். பண தேவைகள் பூர்த்தியாகும். மன அழுத்தம் சரியாகும். மனதில் ஒருவிதமான நம்பிக்கை தோன்றும். இன்று பெண்கள் நிதி தொடர்பான விஷயங்களை தெளிவாக அணுகுவீர்கள்.

பெண்கள் இன்று உணர்ச்சிவசப்பட வேண்டாம். கவனமுடன் பேசுவது நல்லது. இன்று மாணவர்கள் யோசித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்:  சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்