மகர ராசி அன்பர்களே,

இன்று தொட்ட குறை விட்ட குறை என எல்லாவற்றையும் சரி செய்து விட முடியும். சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றி கொடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் சூழல் உள்ளது. நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டு. ஆலய வழிபாட்டில் அக்கறை அதிகரிக்கும். இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாகவே அமையும். துன்பங்கள் தூளாகும். இன்று எப்படிப்பட்ட வேலையையும் சுலபமாக முடித்து நல்ல பெயர் பெறுவீர்கள்.

இனிய செய்திகள் வீடு தேடி வரும். வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நல்ல நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பொது வாழ்க்கையில் புகழ் கூடி விடும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும். எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது நல்லது. இன்று மாணவர்கள் துணிந்து எதிலும் ஈடுபட முடியும். கல்வி மீது அக்கறை ஏற்படும். உயர்கல்வி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்