தனுசு ராசி அன்பர்களே,

இன்று கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் காரியங்கள் வெற்றிப் பாதையில் செல்லும். சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். அனைவருக்கும் ஆதரவாக செயல்படுவீர்கள். தைரியமாக எதையும் யோசித்து செயல்படுங்கள். அவசரப்பட வேண்டாம். இந்த நாளை மகிழ்ச்சி மிக்க நாளாக அமைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.

சந்திராஷ்டம முடியும் வரை பொறுமை காப்பது நல்லது. வேகம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு விவேகமாக  செயல்பட வேண்டும். வேலைச்சுமை கொஞ்சம் இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு தக்க பலம் இருக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பொறுமையை கடைபிடியுங்கள்.

தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தாரை அனுசரித்து செல்லுங்கள். இன்று மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். விளையாடும் போது கவனமாக இருங்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஆறு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்