மீனம் ராசி அன்பர்களே,

இன்று தொட்ட காரியம் துளிர்விடும் நாள் என்று சொல்ல முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வரவுகள் வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் குதூகலமான சம்பவங்கள் நடைபெறும். திட்டமிட்டு செயல்படுவதால் சாதகமான நல்ல பலன் கிடைக்கும்.  எதிர்பாராத அலைச்சல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சக மனிதர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர் ஆசிரியர் அரவணைப்பு கிடைக்கும்.

இன்று மாணவர்கள் பாடத்தில் சந்தேகம் இருந்தால் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். இன்று கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படக்கூடும். நல்ல நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். நேரம் காலம் பார்த்து எந்த செயலிலும் ஈடுபட வேண்டும். அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். எதிர்பாராத சில நல்ல விஷயங்களும் நடக்கக்கூடும். மனப்பதட்டம் பரபரப்பு வேண்டாம்.

பெண்கள் இன்று காரியங்களை நிதானமாக செய்து முடிப்பீர்கள். முன்கோபம் வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள். இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக கொடுத்துவிட்டு  எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இள மஞ்சள் நிறம்