கும்ப ராசி அன்பர்களே,

இன்று வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். சுப காரியங்கள் அற்புதமாக நடந்து முடியும். உங்களை தவறாக எண்ணியவர்கள் இப்போது நட்பு பாராட்டுவார்கள். தாய் வீட்டு சீதனத்தை கேட்டு பெறுவீர்கள். இன்று நட்பு வட்டாரம் விரிவடையும். இன்று தொழில் வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். வேகவேகமாக சில பணிகளை செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகம் தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க பெறும். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. கெட்ட சவகாசங்களை விட்டு விடுவது நல்லது. வீண் கோபம் வேண்டாம். இன்று பெண்கள் எதையும் யோசித்துச் செய்ய வேண்டும். கோபம் இல்லாமல் இருக்க வேண்டும்.

அக்கம் பக்கத்தில் பேசும்போது கவனமாக இருக்கவும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் காணப்படுவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஆறு
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்