லெபனான் நாட்டில் உள்ள ட்ரிபோல்  நகரத்தில் நாய் ஒன்று கருப்பு நிற குப்பை போடும் பிளாஸ்டிக் கவரை வாயில் கவியபடி வந்துள்ளது. அப்போது குழந்தை ஆளும் சத்தம் கேட்டு நாயே கடந்து சென்றவர் பார்த்தபோது பிளாஸ்டிக் கவருக்குள் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. நாயிடமிருந்து குழந்தையை வாங்கிய அந்த நபர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததோடு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளார்.

4 மாதமே ஆன குழந்தை முனிசிபாலிட்டி கட்டிடம் அருகே நாயிடமிருந்து  மீட்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் பேசு பொருளானது. இதையடுத்து நாயிடம் இருக்கும் இறக்க குணம் கூட மனிதர்களிடம் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.