இத்தாலியின் தெற்கு கடற் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்து பெரிய பார்சல்கள் கடலில் வீசுவதை காவல்துறையினரின் கண்காணிப்பு விமானம் கவனித்துள்ளது.  இதையடுத்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்டு அந்த கப்பலை பரிசோதித்ததில் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 5,300 கிலோ கோகைன் போதை பொருள் கடலில் மிதந்து கொண்டிருந்தது. அவற்றை கைப்பற்றிய காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை  கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கொகைன் போதைப் பொருளின் மதிப்பு 7,700 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.