மதுராந்தகத்தில் நடைபெற்ற NDA பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தனது உரையின் தொடக்கத்திலேயே டிடிவி தினகரனை “சகோதரர் டிடிவி” என்று அழைத்தார். இதைக் கேட்டவுடன் அங்கிருந்த தொண்டர்கள் உற்சாக மிகுதியால் ஆரவாரம் செய்தனர். பிரதமர் மோடி இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்ததுமே, திமுக என்கிற ‘சூரியன்’ மறைந்துவிட்டது என்று கிண்டலடித்தார். “தமிழகத்தில் கருணாநிதியின் குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொண்டு மக்கள் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிக்கிறது. இப்படிப்பட்ட ஒரு குடும்ப ஆட்சி நமக்குத் தேவையா?” என்று எடப்பாடியார் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

​மேலும், “தீயசக்தியான திமுகவை வீழ்த்தி, அந்தக் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரப்போகும் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்” என்று உறுதிபடக் கூறினார். பிரதமர் மோடியின் தலைமையில் தென் மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வலுவடைந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி எனப் பிரிந்து கிடந்தவர்கள் இப்போ ‘சகோதரர்களாக’ ஒரே மேடையில் கைகோர்த்துப் பேசுவது, 2026 தேர்தலுக்கான ஒரு மிகப்பெரிய முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.