மெக்சிகோவை சேர்ந்த டியோகோ லீவா என்ற 16 வயது சிறுவன் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து தான் தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்து விட்டதாக கூறி வீட்டு முகவரியை தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது சிறுவன் கைகளை மேலே தூக்கியவாறு காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

அந்த சமயத்தில் சிறுவன் அதிகப்படியான மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. வீட்டிற்குள் சென்று பார்த்த காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சிறுவன் அவரது தந்தை, தாய், சகோதர சகோதரி என நான்கு பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.