காபி பிரியர்களின் ஃபேவரைட் பிராண்டான ஸ்டார்பக்ஸ் பானத்திற்குள் செத்த எலி இருந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ரெடிட் (Reddit) தளத்தில் முதலில் வெளியான இந்த வீடியோவில், பெண் ஒருவர் தான் வாங்கிய காபி கேனுக்குள் ஏதோ உருவம் இருப்பதை உணர்ந்து, அதை வெட்டிப் பார்க்கிறார்.
அப்போது கேனுக்குள் இருந்து காபியில் ஊறிய நிலையில் ஒரு சிறிய எலி வெளியே வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அருவருப்பில் அலறும் சத்தம் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்களின் தரம் குறித்து பெரிய விவாதம் எழுந்துள்ளது. பலர் “இனிமேல் கேன் ஜூஸ், காபி குடிக்கவே பயமாக இருக்கிறது” எனத் தங்கள் அச்சத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
NEW – Starbucks is now receiving massive backlash online after a woman discovered a fully intact mouse inside her can of Double Shot Energy, which she says she plans to sue over. pic.twitter.com/RzzWNVpQzX
— Right Angle News Network (@Rightanglenews) April 13, 2026
அதே சமயம், இது உண்மையிலேயே தற்செயலாக நடந்ததா அல்லது அந்தப் பெண் திட்டமிட்டுச் செய்த சதியா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது. சீல் வைக்கப்பட்ட கேனுக்குள் எலி சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும், இது கவனத்தைப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட நாடகம் என்றும் ஒரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். எனினும், இந்தச் சம்பவம் உணவுப் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
