அமெரிக்கா ஒருவேளை கிரீன்லாந்தைக் கைப்பற்றினால், அதற்குப் பதிலடியாக ரஷ்யா ஏழு நாடுகளைக் கைப்பற்றும் என்று புடினின் வழிகாட்டியான அலெக்சாண்டர் டுகின் விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவும் பனிப்போர் போன்ற சூழலில், ஒரு நாட்டின் ஆதிக்கம் மற்றொன்றைப் பாதிக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையானது உலக அரசியல் வரைபடத்தில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திடும் என்றும், ரஷ்யாவின் பாதுகாப்பைக் கருதி அண்டை நாடுகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது மாஸ்கோ தனது அதிகாரத்தைச் செலுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் உக்ரைன், ஜார்ஜியா மற்றும் பால்டிக் நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் இலக்காக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் புடினின் சிந்தனைகளில் பெரும் தாக்கம் செலுத்தும் டுகின், ரஷ்யாவை மீண்டும் ஒரு மாபெரும் பேரரசாக மாற்றுவதற்கான “யுரேசியன்” கொள்கையை முன்னிறுத்தி வருகிறார். எனவே, ஆர்டிக் பகுதியில் அமெரிக்கா தனது கால்தடத்தைப் பதிக்க முயன்றால், அது ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் என்று இந்த எச்சரிக்கை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.