தாயார் அனுமதி மறுத்தாலும் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் குறையாமல், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சிறுவனின் செய்த காரியம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் விளையாட தாயார் அனுமதிக்க மறுத்ததை அடுத்து, அந்த சிறுவன் படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் தனது வீட்டின் கூரையிலிருந்து அருகிலுள்ள மற்ற கூரைகளுக்கு குதித்து இறங்குகிற காட்சி வைரலாகியுள்ளது.

இந்த வீடியோ ‘Ghar Ke Kalesh’ என்ற X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இதற்கு 3.8 ஆயிரம் லைக்குகள் மற்றும் ஏராளமான கருத்துகள் கிடைத்துள்ளன. வீடியோவில், தாயின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தனது கிரிக்கெட் காதலை கைவிட முடியாமல், கூரையில் இருந்து கூரைக்கு தாவி நிலத்தில் இறங்கி கிரிக்கெட் விளையாட சென்ற அந்த சிறுவனின் செயல், தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

படிக்கட்டை பயன்படுத்தாமல் எளிய வழிகளை விட்டு சவாலான வழிகளை தேர்வு செய்வதன் மூலம், சிறுவன் காட்டும் உற்சாகமும், கிரிக்கெட் பற்றும் வெளிப்படுகின்றன. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். ஒருவர், “இந்தக் குழந்தையின் வாழ்க்கை மீதத்தில் ஒரு பயோகிராபி கூட வரலாம் போல இருக்கு” என நகைச்சுவையுடன் கூறியிருந்தார்.

மற்றொருவர், “ரீல்ஸ்லையோ, சோஷியல் மீடியாலையோ அடிமையாகாமல் வெளியே போய் கிரிக்கெட், பட்டம் பறக்க விடுவது நல்ல விஷயம்” என புகழ்ந்தார். மேலும் ஒருவர், “இவனுக்கு எதிர்காலத்தில் எந்த சவாலும் கஷ்டமா இருக்காது… இப்பவே நல்ல பயிற்சி எடுத்துட்டான்” என உருக்கமான பதிவும் செய்துள்ளார்.