ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர், துப்பாக்கி சுடுதல் சங்க விழாவில் கௌரவிக்கப்பட்ட தருணத்தில், சம்பந்தமே இல்லாமல் 15 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு விளையாட்டின் சாதனையாளரை கௌரவிக்கும் இடத்தில் மற்றொரு விளையாட்டைப் பற்றி பேசுவது மனு பாக்கரை அவமதிப்பதாக சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
Wait, What!????????? 🤦♂️
Olympics Medalist shooter Manu Bhaker was asked about Cricketer Vaibhav Suryavanshi
What kind of the journalism is this? Was ever any cricketer asked about budding shooters??pic.twitter.com/WQVjJbGhrs
— The Khel India (@TheKhelIndia) April 27, 2026
இந்திய ஊடகங்கள் எப்போதுமே கிரிக்கெட்டிற்கு மட்டுமே அதீத முக்கியத்துவம் கொடுப்பதாக நெட்டிசன்கள் விளாசித் தள்ளுகின்றனர். “துப்பாக்கி சுடுதல் வீரர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்காமல், எல்லா இடத்திலும் கிரிக்கெட்டை திணிப்பது ஏன்?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருவதால் இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
