தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பத்தே நாட்களில், சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மாற்றமின்றி இருந்த எரிபொருள் விலை, இன்று (மே 15) நாடு முழுவதும் லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் வரை எகிறியுள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.65-க்கும், டீசல் ரூ.95.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி மத்திய அரசு இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது. தேர்தல் முடிந்ததுமே ‘கிப்ட்’ போல வந்த இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.