சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்து நுகர்வோரிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய சந்தை நிலவரங்களின் மாற்றத்தால், இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையிலிருந்து ரூ.400 குறைந்து, ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது சற்றே சரிவைச் சந்தித்துள்ளது நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் திருமண சுபகாரியங்களுக்குத் தங்கம் வாங்கக் காத்திருப்பவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், சர்வதேசப் பொருளாதாரக் காரணிகளால் இந்த விலை வீழ்ச்சி தற்காலிகமானதுதானா அல்லது வரும் நாட்களிலும் இந்தச் சரிவு நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
