ஆந்திராவில் உள்ள ஆனந்தபுரம் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டயர் வெடித்தது. இதில் அந்த காரி எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த அனைவரும் இஸ்கான் அமைப்பில் நடந்த சங்கீர்த்தனை நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.