ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் இர்ஃபான் அன்சாரி, தனது தோட்டத்தில் விளைந்த பசலைக்கீரையை (பாலக்) தரையில் அமர்ந்து அறுவடை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரும்பாலும் அரசியல் மேடைகளிலும் சர்ச்சையான கருத்துக்களிலும் பிஸியாக இருக்கும் அவர், புத்தாண்டு தினத்தன்று மிகவும் எளிமையாக விவசாயத் தொழிலாளியைப் போல கீரை அறுவடை செய்வதைப் பார்த்த மக்கள் வியப்படைந்துள்ளனர்.
தனது நிலத்தில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட இந்த ஆரோக்கியமான காய்கறிகளை, எந்தவித ரசாயன உரங்களும் இன்றி தாமே நேரில் பராமரித்து வருவதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை வெளியிட்ட அமைச்சர், மனிதனின் உண்மையான அடையாளம் அவனது எண்ணங்களிலும், செயல்களிலும், மண்ணோடும் மக்களோடும் அவன் கொண்டிருக்கும் தொடர்பிலுமே இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
कहते हैं, इंसान को अपनी पहचान खुद बताने की ज़रूरत नहीं होती,
उसकी सोच, उसके कर्म और उसका व्यवहार ही उसकी असली पहचान होते हैं।
पुराने ज़माने की बात ही कुछ और थी—
जहाँ मिट्टी से जुड़ाव, सादगी और स्वास्थ्य जीवन का आधार हुआ करता था।
समय मिलने पर मैं आज भी खेती करता हूँ,
अपने हाथों से… pic.twitter.com/nGvnqKxaCi— Dr. Irfan Ansari (@IrfanAnsariMLA) January 3, 2026
“>
இன்றைய இயந்திரமயமான உலகில், ரசாயனம் இல்லாத சுத்தமான உணவை உட்கொள்ள மக்கள் தங்களது வீடுகளிலோ அல்லது சிறிய இடங்களிலோ விவசாயம் செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது குடும்பத்தினருக்காகவும் உறவினர்களுக்காகவும் தாமே விளைவித்த காய்கறிகளைப் பயன்படுத்துவது மனநிறைவைத் தருவதாகவும், இது தற்சார்பு வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கிய படி என்றும் அவர் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
