பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் டேஷ்கேம் காட்சிகளின் உதவியுடன் பெங்களூருவில் அரங்கேறிய அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது நண்பரை வேண்டுமென்றே கார் ஏற்றி கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடக்கத்தில் இது ஒரு சாலை விபத்து என்று கருதப்பட்ட நிலையில், காரின் டேஷ்கேம் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த மென்பொருள் பொறியாளர் தனது நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், பின்னர் ஆத்திரத்தில் அவர் மீது காரை ஏற்றி சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதும் தெரியவந்தது.

“>

இந்தக் கொடூரமான தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த நண்பர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பகை மற்றும் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்து என்று நாடகமாடி தப்பிக்க முயன்ற அந்தத் தொழில்நுட்ப பணியாளரை, டேஷ்கேம் வீடியோ ஆதாரமாக மாறி சிக்க வைத்தது. தற்போது அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.