பள்ளிக்குச் செல்வதற்காகக் காத்திருந்த அதே பள்ளிப் பேருந்து, இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் பாட்டி மீது ஏறியதில் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்டியும் மற்றொரு குழந்தையும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரின் ரத்தத்தை உறைய வைக்கின்றன. விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்துப் பல கேள்விகளை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.
मुंबई में स्कूली बस ने ही दो बच्चों और उनकी
अभिभावक को कुचल दिया! एक बच्चे की मौत हो गई दूसरा घायल है। अभिभावक भी बस के नीचे आ गई और वो भी गंभीर रूप से घायल है।मैं जानता हूं कि ये भारत है अमेरिका नहीं लेकिन फिर भी ये लिख रहा हूं कि जब भी अमेरिका जाता हूं, देखता हूं और आप भी… pic.twitter.com/RHcmGOUmEp
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) January 28, 2026
“>
இந்நிலையில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு முறையான பயிற்சியும், மிகுந்த எச்சரிக்கையும் அவசியம் என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
