நீலகிரி மாவட்டம் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிக அளவு காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒற்றை யானை ஒன்று அவ்வப்போது சாலை பகுதிக்கு வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கோத்தகிரி நோக்கி கார் ஒன்று நேற்று மாலை 5 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலை பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை காரை பார்த்து சென்றுள்ளது.

இதை பார்த்த ஓட்டுநர் சிறிது தொலைவிலேயே காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அருகே வந்த அந்த யானை காரை ஆக்ரோஷமாக தாக்கியதோடு தூக்கி நடுரோட்டில் வீசி உள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.