ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கோபாலபுரம் பகுதியில் ஒரு வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணிடம் இரவு நேரத்தில் அவருடைய கணவன் செல்போனில் சில ஆபாச வீடியோக்களை காண்பித்துள்ளார். பின்னர் அந்த வீடியோவில் இருப்பது போன்று நாமும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் தினசரி அடித்து துன்புறுத்தி வந்தார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் கவுன்சிலிங் கொடுப்பதற்காக மாப்பிள்ளை டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். ஆனால் அதன் பிறகும் அவர் திருந்தவில்லை. அவர் காம பைத்தியம் பிடித்தது போல் தினசரி அந்த பெண்ணை ஆபாச வீடியோக்கள் காண்பித்து அதுபோன்று இருக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்தார். இதனால் வேதனை அடைந்த அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
