தமிழகத்தில் தீபாவளிக்கு தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்ய உள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி மைசூர் பாகு 250 கிராம், மிக்சர் 200 கிராம், பிஸ்கட் 80 உள்ளிட்டவை 300 ரூபாய்க்கும், நெய் பாதுஷா 250 கிராம், பாதாம் மிக்ஸ் 200 கிராம் உள்ளிட்டவை 500 ரூபாய்க்கும், காஜூ கட்லி 250 கிராம் மற்றும் அல்வா 250 கிராம் உள்ளிட்டவை 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.