பீர்பைசெப்ஸ் நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்ததால் பிரபல யூடியூபரும் தயாரிப்பாளருமான ரன்வீர் அல்லாபாடியா கடும் சர்ச்சையை சந்தித்து வருகிறார். ‘India’s Got Talent’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, போட்டியாளர் ஒருவரிடம், “உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் உடலுறவு கொள்வதை பார்ப்பீர்களா அல்லது அவர்களுடன் ஒருமுறை பங்கேற்பீர்களா?” என்ற கேள்வியை எழுப்பினார். இதனை பலரும் மரியாதையற்றதாகவும், மன உளைச்சலை தரக்கூடியதாகவும் கண்டித்து வருகிறார்கள்.
ரன்வீரின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் இதைப் பெரும் அவமதிப்பு என கண்டித்து, பல்வேறு மாநில காவல் நிலையங்களில் இவருக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தனது தவறை உணர்ந்த ரன்வீர் அல்லாபாடியா, சர்ச்சையான கேள்விக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். தனது நோக்கம் அவமதிக்கவோ ஆபாசமாக பேசவோ அல்ல என்றும், எதிர்காலத்தில் மேலும் கவனமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல், நகைச்சுவை நடிகை ஸ்வாதி சச்தேவா தனது ஸ்டாண்ட்அப் நிகழ்ச்சியில் சொன்ன கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. வீட்டில் வைப்ரேட்டரை கண்ட தாயின் எதிர்வினையை நகைச்சுவையாக விவரித்த ஸ்வாதி, தன்னுடைய அம்மா அதை “பொம்மை” என்று சொன்னது பற்றிய அனுபவத்தை பகிர்ந்தார். இதனை பலர் ஆபாசமாகக் காண்பித்து, நகைச்சுவையின் பெயரில் வெட்கக்கேடான கருத்துகளை பரப்புவதாக குற்றம்சாட்டி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
